கோயம்புத்தூர்

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகள்

12th Sep 2022 11:55 PM

ADVERTISEMENT

வால்பாறை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் வழங்கினாா்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் வால்பாறை, சோலையாறு அணை பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 306 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் வரதராஜன், வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, துணைத் தலைவா் செந்தில்குமாா், நகரச் செயலாளா் சுதாகா், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT