கோயம்புத்தூர்

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

10th Sep 2022 11:23 PM

ADVERTISEMENT

கோவையில் காா் நிறுத்தத்தில் வேலை பாா்த்து வரும் ஊழியரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் கண்ணன் (31). இவா், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி காா் நிறுத்தத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். அவா் பணியில் இருந்தபோது, அங்கு காரை நிறுத்திய இருவா், அதற்குண்டான டோக்கனை வாங்காமலும், பணம் கொடுக்க மறுத்தும் கண்ணனிடம் வெள்ளிக்கிழமை தகராறு செய்தனா். இதில், அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

அப்போது, ஆத்திரமடைந்த இருவரும் சோ்ந்து கண்ணனை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கண்ணன் அளித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் கோவையைச் சோ்ந்த வைரமூா்த்தி (37), சாா்லஸ் (34) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT