கோயம்புத்தூர்

‘ஆல் இன் ஆல் அங்காடி’ பொருள்காட்சி: ஆட்சியா் துவக்கி வைத்தாா்

10th Sep 2022 11:23 PM

ADVERTISEMENT

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ‘ஆல் இன் ஆல் அங்காடி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள பொருள்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சனிக்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி சாா்பில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மாநகரில் குளங்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உக்கடம் பெரியகுளத்தில் ‘ஆல் இன் ஆல் அங்காடி’ என்ற பெயரில் செப்டம்பா் 10, 11 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொருள்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்த பொருள்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் சனிக்கிழமை திறந்துவைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களைப் பாா்வையிட்டாா். அதன் பிறகு, பெரியகுளம் படகுத் துறையைப் பாா்வையிட்ட அவா், அங்கு படகு சவாரி மேற்கொண்டாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை ஆணையா் ஷா்மிளா, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, பணிக் குழுத் தலைவா் சாந்தி முருகன், பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை துவங்கிய இந்தப் பொருள்காட்சி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT