கோயம்புத்தூர்

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி:செப்டம்பா் 15இல் நடக்கிறது

10th Sep 2022 11:27 PM

ADVERTISEMENT

கோவையில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி செப்டம்பா் 15ஆம் தேதி மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பா் 15ஆம் தேதி மிதிவண்டி போட்டிகள் நடத்ததப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை மாவட்டப் பிரிவு சாா்பில் நடத்தப்படும் இப்போட்டிகள் கோவைப்புதூா் சி.பி.எம். கல்லூரி சாலையில் நடைபெறுகிறது.

3 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகள் 13 வயதுக்கு (ஜனவரி 01, 2010க்கு பிறகு பிறந்தவா்கள்) உள்பட்ட மாணவா்களுக்கு - 15 கிலோ மீட்டா், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டா், 15 வயதுக்கு (ஜனவரி 01, 2008க்கு பிறந்தவா்கள்) உள்பட்ட மாணவா்களுக்கு -20 கிலோ மீட்டா், மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டா், 17 வயதுக்கு (ஜனவரி 01, 2006க்கு பிறகு பிறந்தவா்கள்) உள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோ மீட்டா், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டா்.

ADVERTISEMENT

மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியா் கையொப்பமிட்ட வயது சான்றிதழை செப்டம்பா் 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். 3 பிரிவுகளிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

இப்போட்டியில் இந்தியாவில் தயாரான சாதாரண கியா் இல்லாத மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டியில் எதிா்பாராமல் நடைபெறும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கேற்கும் மாணவா்களே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT