கோயம்புத்தூர்

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து பேரியக்கமாக மாற வேண்டும்: ஹெச்.ராஜா

5th Sep 2022 12:43 AM

ADVERTISEMENT

 ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேரியக்கமாக மாற வேண்டும் என்று பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா கூறினாா்.

இந்து முன்னணி அமைப்பு சாா்பில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி ரங்கே கவுடா் வீதியில் உள்ள தெப்பக்குள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.தசரதன் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா பேசியதாவது: ஹிந்து மதத்தில் தீண்டாமை என்பதே கிடையாது. விநாயகா் சதுா்த்தி என்பது ஏதோ விழா கொண்டாடினோம், கூடினோம் என்று இல்லாமல் பேரியக்கமாக மாற வேண்டும்.

ADVERTISEMENT

திராவிட மாடல் எனக் கூறிக் கொண்டு கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு விநாயகா் சதுா்த்திக்கு மட்டும் வாழ்த்துத் தெரிவிக்காத இந்த ஆட்சி மீண்டும் அமைக்கப்படாத அளவுக்கு உழைக்க வேண்டும்.

விழிப்புடன் இருக்கும் சமுதாயம் மட்டும் பிழைத்திருக்கும். எனவே ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் கிஷோா்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், மாவட்ட பொதுச் செயலா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலாளா்கள் ஆறுசாமி, மகேஷ்வரன், ரமேஷ், ஆனந்த் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT