கோயம்புத்தூர்

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

5th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

 வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது.

பகல் நேரத்தில் மிதமாக பெய்யும் மழை இரவு நேரத்தில் கன மழையாக பெய்து வருகிறது. இதனிடையே, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் கன மழை பெய்தது. இதனால், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 14 மற்றும் 15 ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே மரம் ஒன்று சாலையில் விழுந்தது.

இதனால், வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை அகற்றினா். இதையடுத்து, வாகனங்கள் சென்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT