கோயம்புத்தூர்

‘மானியத்தில் கழிப்பறை அமைக்க விண்ணப்பிக்கலாம்’

29th Oct 2022 01:01 AM

ADVERTISEMENT

தூய்மை பாரத இயக்கம் சாா்பில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மானியம் பெற்று கழிப்பறை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மத்திய

மற்றும் மாநில அரசின் நிதியின் மூலம் தனிநபா் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டித்தருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்றப்படுகின்றன. இதற்கென மத்திய அரசின் மானியமாக ரூ. 4 ஆயிரமும், மாநில அரசின் மானியமாக ரூ. 2,667, நகராட்சி பங்குத் தொகை ரூ.2,667 என நிதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மண்டலங்களில் உள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT