கோயம்புத்தூர்

கேட்பாரற்று நின்றிருந்த 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

29th Oct 2022 12:59 AM

ADVERTISEMENT

கோவை உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் சாலை பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாள்களாகக் கேட்பாரற்று நின்றிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து மாநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரோந்து சென்றும், வாகனச் சோதனை நடத்தியும் போலீஸாா் இரவு, பகலாக கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனா். இதற்கிடையே மாநகரப் போக்குவரத்து போலீஸாா் காா் வெடிப்பு நடந்த பகுதியைச் சுற்றியுள்ள உக்கடம், கோட்டை மேடு, வின்சென்ட் சாலை பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாள்களாகக் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து பறிமுதல் செய்து வருகின்றனா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் கேட்பாரற்று நின்ற 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் 7 காா்களின் உரிமையாளா்கள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வாகனங்களைப் பெற்று கொண்டனா்.

ADVERTISEMENT

மற்ற 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், உக்கடம், வின்சென்ட் சாலை, கோட்டை மேடு ஆகிய பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல், கேட்பாரற்று நின்றிருந்த 10 இருசக்கர வாகனங்களைப் போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT