கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

29th Oct 2022 01:06 AM

ADVERTISEMENT

கோவை கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன், சித்தி விநாயகா் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த 25 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் பல்வேறு வேள்வி, யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை கோபுர கலசங்கள், மூலவா் விக்கிரகங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT