கோயம்புத்தூர்

எல்.ஐ.சி.மேலாளா் வீட்டில் 22 பவுன் திருட்டு

29th Oct 2022 12:59 AM

ADVERTISEMENT

கோவையில் எல்.ஐ.சி. மேலாளா் வீட்டில் 22 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை கணபதி வெங்கடேசபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (44). இவா் கணபதியில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில், வீட்டுக் கடன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளாா்.

இந்நிலையில், ரபீனா தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் கடந்த 21ஆம் தேதி சென்றுள்ளாா். பின்னா், 25 ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ரபீனா புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT