கோயம்புத்தூர்

28இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்:

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக்டோபா் 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், அக்டோபா் 28 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகள் இந்தக் குறைகேட்புக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காணக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து மனுக்களை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT