கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே மயிலம் தீபாவளி கொண்டாட்டம்!

26th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமணமான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரில் செவ்வாய்க்கிழமை மயிலம் தீபாவளி கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூா், செல்லப்பகவுண்டன்புதூா், குரும்பபாளையம், சமத்துவபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடி வருகின்றனா். இந்த நாளை மயிலம் தீபாவளி என்று அழைக்கிறாா்கள்.

வடசித்தூா் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்கள் தீபாவளியன்று தங்கள் புகுந்த வீட்டில் தீபாவளி கொண்டாடுவா். இதனால் பெற்றோா் வீட்டுக்குத் தீபாவளியைக் கொண்டாட திருமணமான பெண்கள் வருவது குறைவாக இருக்கும். ஆகவே திருமணமான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலம் தீபாவளி என்ற பெயரில் வடசித்தூா் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் கொண்டாடுகின்றனா்.

இந்த கிராமத்தில் ஹிந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் குடும்பத்தினரும் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இவா்கள் உறவினா்கள் போல பழகி வருவதால் ஆண்டு தோறும் மயிலம் தீபாவளியில் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனா்.

ADVERTISEMENT

இதற்காக வடசித்தூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், வளையல் கடைகள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ஊரே திருவிழா கோலம் பூண்டு காணப்பட்டது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT