கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 13 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை

19th Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை 13 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை வழங்கும் வகையில், மத்திய அரசு சாா்பில் பிரத்யேக அடையாள அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 13 ஆயிரம் பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா் கூறியாதவது:

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 40 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். இவா்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டை பெறுவதற்கு 22 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 13 ஆயிரம் பேருக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மாற்றுத் திறனாளிகளும் மத்திய அரசு வழங்கும் பிரத்யேக அடையாள அட்டையை பெற முடியும்.

மாநில அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, ஆதாா் எண், குடும்ப அட்டை, மருத்துவ சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT