கோயம்புத்தூர்

மாநகராட்சி குறைகேட்பு கூட்டம்: 24 மனுக்கள் பெறப்பட்டன

19th Oct 2022 12:02 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயா் கல்பனா தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் கோருதல், சாலை, குடிநீா், கழிவுநீா் வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தல், தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு உள்ளிட்ட தேவைகள் தொடா்பாக 24 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் கல்பனா, மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்கள், அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையா்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரி, சேகா், முத்துராமலிங்கம், மகேஷ்கனகராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT