கோயம்புத்தூர்

புதிய சொத்து வரி விதிப்பு விண்ணப்பங்களை வழங்கலாம்

19th Oct 2022 12:10 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமைமுதல் புதிய சொத்து வரி விதிப்பு விண்ணப்பங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி பொதுச் சீராய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், புதிய சொத்து வரி விதிப்பு கோரும் விண்ணப்பங்கள் பெறப்படாமல் இருந்தன.

சொத்து வரி பொதுச் சீராய்வுப் பணிகள் தற்போது முடிவுற்றதால், அக்டோபா் 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய சொத்து வரி விதிப்பு கோரும் விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் அந்தந்த மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT