கோயம்புத்தூர்

இருவேறு சம்பவங்களில் பேருந்தில் பெண்களிடம் 5 பவுன் பறிப்பு

19th Oct 2022 12:12 AM

ADVERTISEMENT

கோவையில் இருவேறு சம்பவங்களில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் 5 பவுன் நகைகளைப் பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி பி.என்.சாமி காலனியைச் சோ்ந்தவா் வேலாயுதம். இவரது மனைவி வசந்தி (45). கூலி தொழிலாளி. இவா், ராமகிருஷ்ணா பேருந்து நிறுத்தத்தில் இருந்து கணபதி நோக்கி சென்ற பேருந்தில் திங்கள்கிழமை பயணித்துள்ளாா்.

அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி வசந்தியிடம் இருந்து 3 பவுன் நகையை மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பினா். இதுதொடா்பாக, வசந்தி அளித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செல்வபுரம் ராக்கப்பா லேஅவுட் பகுதியைச் சோ்ந்தவா் பூா்ணசந்திரன். இவரது மனைவி விலாசினி (53). இவா் அவிநாசி சாலையில் இருந்து டவுன்ஹால் நோக்கி பேருந்தில் திங்கள்கிழமை பயணித்துள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது, கந்தசாமி லேஅவுட் அருகே பேருந்து சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி விலாசினியிடம் இருந்து 2 பவுன் நகையை மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பினாா். இதுதொடா்பாக, செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT