கோயம்புத்தூர்

உலக பருத்தி தினம்

8th Oct 2022 12:31 AM

ADVERTISEMENT

கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மேலாண்மை நிறுவனத்தில் உலக பருத்தி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பருத்தி தின விழாவுக்கு நிறுவனத்தின் இயக்குநா் அல்லி ராணி தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஹிரன் அசோக் தாகா, கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் குணசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

இந்தியாவின் முதல் பிரீமியம் பருத்தி பிராண்டான கஸ்தூரி காட்டனை மையப்படுத்தி இந்த விழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பருத்தி துணிகளைக் கொண்டு இந்திய வரைபடத்தை மாணவ-மாணவிகள் உருவாக்கியிருந்தனா்.

ADVERTISEMENT

விழாவில் பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT