கோயம்புத்தூர்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

8th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில் அக்டோபா் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ( ஐடிஐ, தொழில்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித் தொகை மற்றும் தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு அக்டோபா் 31 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

ADVERTISEMENT

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT