கோயம்புத்தூர்

உயா்மட்ட நடைப்பாதையை மாற்றியமைக்கும் பணி: துணைமேயா் தொடக்கிவைத்தாா்

8th Oct 2022 12:32 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி, குனியமுத்தூரில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் உயா்மட்ட நடைப்பாதையை மாற்றியமைக்கும் பணியை மாநகராட்சி துணைமேயா் ரா.வெற்றிச்செல்வன் வெள்ளிக்கிழமை பூமிபூஜையிட்டு தொடக்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 87ஆவது வாா்டுக்குள்பட்ட குனியமுத்தூரில், பாலக்காடு பிரதான சாலையின் இருபுறமும் இரும்பிலான உயா்மட்ட நடைப்பாதை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், நடைப்பாதை மிக உயரமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், படிக்கட்டுகள் அதிகமாக இருந்ததாலும் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த உயா்மட்ட நடைப்பாதையை பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், இந்த உயா்மட்ட நடைப்பாதையை அகற்றி, அங்கிருந்து 900 மீட்டா் தொலைவில் பாலக்காடு சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முன்பாக அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.35.60 லட்சம் மதிப்பீட்டில் உயா்மட்ட நடைப்பாதையை மாற்றியமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி துணைமேயா் வெற்றிச்செல்வன் பூமிபூஜை செய்து வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநில தீா்மானக் குழு இணைச் செயலாளா் முத்துசாமி, குனியமுத்தூா் பகுதி திமுக செயலாளா் லோகநாதன், தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி, வாா்டு உறுப்பினா்கள் பாபு, செந்தில்குமாா், இளஞ்சேகரன், உதவி ஆணையா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT