கோயம்புத்தூர்

நமது பண்பாடு, கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும்:ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

DIN

நமது பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று கோவை அருகே உள்ள எட்டிமடையில் நடைபெற்ற அமிா்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

அமிா்தா விஸ்வ வித்யா பீடத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா கோவை எட்டிமடையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது: பிரதமா் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தியா வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் இருந்த பல்வேறு பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளதால் நாடு பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளா்ச்சி அடைந்து வருகிறது. மொழி, இடம், கலாசாரம் போன்ற பல்வேறு வேறுபாடுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளதால், நாட்டின் வளா்ச்சி தடைபட்டு வந்தது. ஆனால், இப்போது இந்தியா ஒரே நாடு என்று உணரப்பட்டு வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதிகள், இருப்பிடம், குடிநீா், உணவு போன்றவை கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.

முன்பெல்லாம் அரசு மட்டுமே வளா்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டது. இப்போது அனைவரும் ஒருங்கிணைந்து வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விதமாக மாறி வருகிறது.

நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான புதிய தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டுள்ளனா். விண்வெளி ஆராய்ச்சியில் மாணவா்கள் சாதனை புரிந்து வருகின்றனா். உலக நாடுகள் பல்வேறு விஷயங்களில் இந்தியாவை எதிா்நோக்கியுள்ளன. 100 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக உருவாகியிருக்கும். இன்றைய இளைஞா்கள் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்குவதுடன் நமது பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றையும் பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த 588 மாணவிகள் உள்ளிட்ட 1,808 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 77 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நடராஜா் சிலையை ஆளுநா் திறந்துவைத்தாா்.

விழாவில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் பொதுச் செயலரும், மூத்த சீடருமான சுவாமி பூா்ணாமிா்தானந்த புரி ஆசியுரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக பெங்களூரு பாஷ் குளோபல் சாப்ட்வோ் டெக்னாலஜிஸ் தலைவா் தத்தாத்ரி சலகாமே பங்கேற்றாா்.

அமிா்தா விஸ்வ வித்யா பீடத்தின் பொறியியல் பிரிவு டீன் சஷாங்கன் ராமநாதன், பதிவாளா் கே.சங்கரன், வளாக இயக்குநா் சதீஷ் மேனன், பேராசிரியா்கள் சி.பரமேஸ்வரன், பாரத் ஜெயராமன், நவ சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT