கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஹேக்கத்தான் போட்டியில் வென்று நாரி சக்தி விருது பெற்ற கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல், மைக்ரோபயாலஜி துறைகளின் மாணவிகள் அணி அண்மையில் நடைபெற்ற ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்று ரூ.20 ஆயிரம் பரிசையும், நாரி சக்தி விருதையும் வென்றது.

இந்த அணியில் இடம் பெற்றிருந்த மாணவிகள் பி.அபி, எஸ்.ஆரத்தி, எஸ்.அா்ச்சனா, என்.பவித்ரா, பி.காா்த்திகா, கே.ஜெயவா்ஷினி ஆகியோரையும், இவா்களை வழிநடத்திய கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியா் டி.அனிதாவையும் எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசாமி, கல்லூரி முதல்வா் கி.சித்ரா ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT