கோயம்புத்தூர்

போலீஸ் அருங்காட்சியத்தை பாா்வையிட மீண்டும் அனுமதி

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் போலீஸ் அருங்காட்சியத்தை பாா்வையிட மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், அங்கு தற்காலிகமாக மக்கள் பாா்வையிட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது, பணிகள் நிறைவடைந்துள்ளதால் வியாழக்கிழமை முதல் (திங்கள்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களும்) பொதுமக்கள் பாா்வைக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது.

அருங்காட்சியகத்தின் முழு பயனைப் பெறக்கூடிய வகையில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, நண்பகல்12.30 மணி முதல் 1.30 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை இலவச ‘வழிகாட்டு பயணம்’ நடத்தப்படும்.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை போலீஸ் நாய் கண்காட்சி நடத்தப்படும். பாா்வையாளா்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 மட்டும் வசூலிக்கப்படும். இதில் அரசு மற்றும் அரசு சாா்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசம்.

ADVERTISEMENT

அரசு சாரா மற்ற தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாா்வையாளா்கள் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT