கோயம்புத்தூர்

புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

DIN

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பம்ப்செட், வெட் கிரைண்டா், கியா் பாக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள், கோழிப் பண்ணைகளில் பிகாா், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பலரும் தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக ஆயத்தமாகி வருகின்றனா்.

இந்நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, கோவை பயணிகள் நலச் சங்கத்தினா் கூறுகையில்,{‘ கரோனா பரவல் காலத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதுபோல, கோவையில் தங்கி வேலை செய்யும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்ல வசதியாக கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

SCROLL FOR NEXT