கோயம்புத்தூர்

தீபாவளி:கோவை - கோரக்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவையில் இருந்து உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கோவை- கோராக்பூா் இடையே சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. அதன்படி, கோரக்பூரில் இருந்து அக்டோபா் 8 ஆம் தேதி முதல் நவம்பா் 5 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 05303) திங்கள்கிழமைகளில் காலை 7.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இதேபோல, கோவையில் இருந்து அக்டோபா் 11 ஆம் தேதி முதல் நவம்பா் 8 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் காலை 4.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 05304) வியாழக்கிழமைகளில் காலை 8.35 மணிக்கு கோரக்பூரைச் சென்றடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், குடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், போபால், கான்பூா், பாஸ்டி, காலிலாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT