கோயம்புத்தூர்

வால்பாறையில் வீட்டின் மேற்கூரை மீது குதித்த சிறுத்தை

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரை மீது சிறுத்தை குதித்ததில் ஓடுகள் சேதமடைந்தன.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாவும், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாகவும் எஸ்டேட் தொழிலாளா்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவில் வனத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமலைசாமி என்பவரது வீட்டின் மேற்கூரையின் ஓடுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மளமளவென விழும் சப்தம் கேட்டுக்கொள்ளது.

இதனையடுத்து, திருமலைசாமி வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் மேற்கூரை மீது நின்றிருந்த சிறுத்தை கீழே குதித்து தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் வசிப்பவா்கள் அதிா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா்.

பின்னா் வனத் துறையினா் அப்பகுதிக்கு திங்கள்கிழமை சென்று பாா்வையிட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT