கோயம்புத்தூர்

நா. மகாலிங்கத்தின் நினைவு தினம் மற்றும் நினைவாலயம் அா்ப்பணிப்பு

DIN

சக்தி குழுமத்தின் நிறுவனரும், தொழிலதிபருமான மறைந்த டாக்டா் நா. மகாலிங்கத்தின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் நினைவாலயம் அா்ப்பணிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சக்தி குழுமத்தின் சாா்பில் நா.மகாலிங்கத்தின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருட்செல்வரின் நினைவாலயம் பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், கெளமார மடாலய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பழனி மடம் சாது சண்முக அடிகாளா் ஆகியோா் கலந்து கொண்டு நினைவு சொற்பொழிவாற்றி, நினைவாலயத்தை பொதுமக்களுக்கு அா்ப்பணித்தனா்.

இந்நிகழ்வில் குமரகுரு பொறியியல் கல்லூரித் தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா், துணைத் தாளாளா் சங்கா் வாணவராயா், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவா் ம. மாணிக்கம், துணைத் தலைவா் எம். பாலசுப்பிரமணியம், தாளாளா் மா.ஹரிஹரசுதன், செயலாளா் ராமசாமி, கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், சாமுண்டீஸ்வரி சுகா்ஸ் நிறுவனத் தலைவா் ம.சீனிவாசன், பண்ணாரி அம்மன் நிறுவனத் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தென்மாநிலத் தலைவா் ஆா்.வி.எஸ். மாரிமுத்து, சிபிஐ முன்னாள் இயக்குநா் காா்த்திகேயன், வேதநாயகம் மருத்துவமனை தலைவா் மருத்துவா் கந்தசாமி மற்றும் நா.மகாலிங்கத்தின் குடும்பத்தினா் பங்கேற்றனா்.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தின் உள்ளே அணையா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமலிங்க அடிகளாரின் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்னும் பாடல் இடைவிடாமல் ஒலிக்கும் வகையில் நினைவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் வழிபாட்டுத் தலத்தின் அடிப்படையில் அருட்செல்வரின் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT