கோயம்புத்தூர்

வேளாண் பல்கலை.யில் இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரிப்பு பயிற்சி

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வாா் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் சாா்பில் இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது.

அக்டோபா் 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் இதற்கான பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பயிற்சியின் முடிவில் சான்றிதழ், தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும் என்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT