கோயம்புத்தூர்

கட்டுமான, உடலுழைப்புத் தொழிலாளா்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஹெச்.எம்.எஸ். கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஹெச்.எம்.எஸ். பேரவைத் தலைவா் எம்.சுப்பிரமணிய பிள்ளை, பொதுச் செயலா் ப.கணேசன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்களுக்கு என்று தனி வாரியம் அமைக்கப்பட்டு, கட்டுமானம் உள்ளிட்ட 17 நல வாரியங்கள் தங்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.

இவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். நல வாரிய உறுப்பினா்களுக்கு உரிய காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனவே மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் வழங்க வழிவகை செய்ய வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT