கோயம்புத்தூர்

டாஸ்மாக் ஊழியா் சம்மேளன மாநாடு

DIN

டாஸ்மாக் ஊழியா் சம்மேளனத்தின் 5 ஆவது மாநில மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனத்தின் வரவேற்புக் குழுத் தலைவா் எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்றாா். டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு சட்டப்படியான பணி வரன்முறை, காலமுறை ஊதியம், சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியா்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநாட்டில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், சிஐடியூ மாநில துணைத் தலைவா் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவா் கே.பழனிவேலு, பொதுச் செயலாளா் கே.திருச்செல்வன், பொருளாளா் ஜி.சதீஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சி.பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT