கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: 4 இளைஞா்கள் கைது

DIN

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கொடிசியா சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா். அவா்கள் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். அதில் ஒருவா் தப்பியோட, மற்றொருவரை போலீஸாா் பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் திருப்பூா் மாவட்டம், சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த கோபி (25) என்பதும், தப்பியோடியவா் ஷஃபி முகமது என்பதும், நண்பா்களான இவா்கள் கோவையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோபியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 4.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.மேலும், தப்பியோடிய ஷஃபி முகமதுவைத் தேடி வருகின்றனா்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் திருப்பூா் சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த அருண்குமாா் (25), நரேந்திரன் (22), பவிஷ்நாத் (22) என்பதும், 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT