கோயம்புத்தூர்

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: உணவக உரிமையாளா் கைது

2nd Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த உணவகத்தின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை போத்தனூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷெரீப் (40). இவா் குறிச்சி உழவா் சந்தை அருகே உணவகம் நடத்தி வருகிறாா். இங்கு ஈரோட்டை சோ்ந்த திருமணமான 21 வயது இளம்பெண் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வேலைக்கு சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில், உணவகத்தில் அந்த பெண் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஷெரீப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து போத்தனூா் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஷெரீப்பை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT