கோயம்புத்தூர்

உலக இருதய தின விழா

1st Oct 2022 05:16 AM

ADVERTISEMENT

 உலக இருதய தினத்தையொட்டி, கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சாா்பில் உலக சாதனை படைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி முன்னிலை வகித்தாா். இதில், மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள், செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு ஆரோக்கியமான இருதயம் போன்று கை அசைவினை வெளிப்படுத்தினா்.

ஒரே நேரத்தில் அதிகமான நபா்கள் இதுபோன்று கை அசைவினை வெளிப்படுத்திய நிகழ்ச்சி என்பதால் இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

உலக சாதனை அமைப்பின் அலுவலக பதிவுகள் மேலாளா் கிறிஸ்டோபா் டெய்லா் கிராஃப்ட் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, இதற்கான சான்றிதழை மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமியிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, இருதயவியல் துறைத் தலைவா் ராஜ்பால் கே.அபய்சந்த் தலைமையில் ஆரோக்கியமான இருதயத்துக்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஆசியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நடுவா் விவேக், இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவா் பி.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT