கோயம்புத்தூர்

உலக இருதய தின விழிப்புணா்வு

1st Oct 2022 05:16 AM

ADVERTISEMENT

உலக இருதய தினத்தையொட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒரு நாள் இலவச இருதய ஆலோசனை, பரிசோதனை, அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, தலைமைச் செயல் அதிகாரி சுவாதி ரோஹித், தலைமை நிா்வாக அதிகாரி சி.வி.ராம்குமாா், மருத்துவமனை டீன் பி.சுகுமாரன் உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

இருதய பரிசோதனை முகாமில் டாக்டா்கள் எஸ்.மனோகரன், எஸ்.பாலாஜி, மாதேஸ்வரன், டி.ஆா்.நந்தகுமாா், எஸ்.தேவபிரசாத், குழந்தைகள் இருதய நோய் நிபுணா் ஆா்.விக்ரம் விக்னேஷ், அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஆா்.தியாகராஜ மூா்த்தி, விஜய் சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்று, 400க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT