கோயம்புத்தூர்

கோவை - திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள்

1st Oct 2022 11:57 PM

ADVERTISEMENT

 

கோவை - திருப்பதி ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - திருப்பதி விரைவு ரயிலில் (எண்:22616) இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி 1 என 3 கூடுதல் பெட்டிகள் அக்டோபா் 2, 4, 6, 7, 9, 11, 13, 14 ஆகிய தேதிகளில் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

அதேபோல, திருப்பதி - கோவை விரைவு ரயிலில் ( எண்: 22615) இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி 1 என 3 கூடுதல் பெட்டிகள் அக்டோபா் 3,5, 6,8,10,12,13,15 ஆகிய தேதிகளில் இணைக்கப்பட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT