கோயம்புத்தூர்

நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

1st Oct 2022 05:16 AM

ADVERTISEMENT

வால்பாறை அருகே நியாய விலைக் கடையை காட்டு யானை சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. பின்னா் உள்ளிருந்த அரிசி மூட்டைகளையும் சேதப்படுத்தியது.

தொடா்ந்து, அதே பகுதியில் இருந்த இரண்டு குடியிருப்புகளைச் சேதப்படுத்திய யானை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT