கோயம்புத்தூர்

விஜயதசமி: கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்

1st Oct 2022 05:14 AM

ADVERTISEMENT

விஜயதசமியை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் யெஷ்வந்த்பூா் - கண்ணூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டும், பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டும் அக்டோபா் 5 ஆம் தேதி, காலை 7.40 மணிக்கு யெஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் யெஷ்வந்த்பூா் - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06283) அன்று இரவு 8.30 மணிக்கு கண்ணூரைச் சென்றடையும்.

அதேபோல, எதிா்மாா்க்கமாக அக்டோபா் 5 ஆம் தேதி இரவு 11 மணிக்கு, கன்னூரில் இருந்து புறப்படும் கன்னூா் - யெஷ்வந்த்பூா் சிறப்பு ரயில் (எண்: 06284) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு யெஷ்வந்த்பூரைச் சென்றடையும். இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரனூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருப்பத்தூா், கிருஷ்ணராஜபுரம், பானஸ்வாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT