கோயம்புத்தூர்

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை:இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

1st Oct 2022 05:14 AM

ADVERTISEMENT

90 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்தவா் மைதீன் (20). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சுமாா் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் வீட்டுக்குள் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இது தொடா்பான புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி மேற்கு போலீஸாா், மைதீனை கைது செய்தனா். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிவில் மைதீன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி நந்தினிதேவி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT