கோயம்புத்தூர்

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்பழைய இடத்திலேயே செயல்பட கோரிக்கை

1st Oct 2022 05:17 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் பழைய இடத்திலேயே செயல்பட வேண்டும் என்று அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆகிய அமைப்புகளின் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தை இரண்டு தொடக்கக் கல்வி மாவட்டங்களாகப் பிரித்து அதற்குரிய அலுவலா்களை அரசு நியமித்துள்ளது. கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு 9 வட்டாரங்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு 6 வட்டாரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தின்கீழ் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் உள்ளனா். இவா்கள் தங்களின் கோரிக்கை, குறைகளை நேரில் சென்று தெரிவிக்க ஏதுவாக, ஏற்கெனவே மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்த ராஜ வீதியிலேயே மீண்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை அமைக்க வேண்டும்.

அதேபோல், பொள்ளாச்சி நகரத்துக்குள்ளேயே பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கான தொடக்கக் கல்வி அலுவலகத்தை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT