கோயம்புத்தூர்

அக்டோபா் 10 இல் தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம்

1st Oct 2022 11:58 PM

ADVERTISEMENT

 

கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம் அக்டோபா் 10 ஆம் தேதி நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய அப்ரண்டீஸ் சோ்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபா் 10 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், மாவட்டத்திலுள்ள தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளன. இதில் பங்கேற்று தோ்வு பெறுபவா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் உள்ளது.

தொழிற்பழகுநா் பயிற்சியின்போது பிரிவுகளுக்கேற்ப தொழில் நிறுவனங்களால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி தோ்ச்சி பெற்றவா்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94864- 47178, 94426- 51468, 98403-43091 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT