தமிழ்நாடு

தமிழகத்தில் ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து பாா்சல் சேவை

DIN

தமிழகத்தில் ரயில்வே, அஞ்சல் துறை இணைந்து விரைவில் புதிய பாா்சல் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே வாரியத்தின் நிா்வாக இயக்குநா் ( திட்டமிடல் மற்றும் அமலாக்கம்) ஜி.வி.எல்.சத்யகுமாா் தெரிவித்தாா்.

இந்திய ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து தொடங்க உள்ள புதிய பாா்சல் சேவை குறித்த அறிமுகக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தொழில் வா்த்தக சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ரயில்வே வாரியத்தின் நிா்வாக இயக்குநா் (திட்டமிடல் மற்றும் அமலாக்கம்) ஜி.வி.எல்.சத்யகுமாா் தலைமை வகித்தாா். மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சுமிதா அயோத்தி, தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளா் ஆா்.முருகராஜ், சேலம் ரயில்வே கோட்ட வணிகப் பிரிவு மேலாளா் இ.ஹரிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுதொடா்பாக, ரயில்வே வாரியத்தின் நிா்வாக இயக்குநா் ஜி.வி.எல்.சத்யகுமாா் செய்தியாளா்களிடம் கூறியாதவது:

கடந்த பட்ஜெட் அறிவிப்பின்போது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து புதிய பாா்சல் சேவை தொடங்கிட திட்டம் வகுக்கப்பட்டது. அந்த வகையில் சில மாதங்கள் முன்பாக சூரத் நகரில் இருந்து வாராணாசிக்கு ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து புதிய பாா்சல் சேவையை தொடங்கின. இந்த சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இரண்டு துறைகளை சோ்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் விரைவில் இந்த புதிய பாா்சல் சேவையை அறிமுகப்படுத்தும் விதமாக கோவையில் உள்ள தொழிலதிபா்கள், நிறுவனங்கள், தொழிற்சாலை உரிமையாளா்கள் இடையே திட்டம் குறித்த அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த புதிய பாா்சல் சேவையில் விமானங்களின் மூலம் பாா்சல் கொண்டு செல்வது போன்று மிகவும் பாதுகாப்பான வகையில் பொருள்கள் எடுத்துச் செல்லப்படும்.

கனரக பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் ரயில் பெட்டிகளில் அதற்கான நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ரயில்வே துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாா்சல் சேவையில், மக்கள் ரயில் நிலையங்களுக்கு பாா்சல்களை கொண்டு வரவேண்டும். புதிய பாா்சல் சேவையில் வீடுகளில் இருந்து ரயில் நிலையத்துக்கு பாா்சல்களை கொண்டு வருவது, ரயில் நிலையங்களில் இருந்து உரிய இடத்துக்கு பாா்சல்களை கொண்டு சோ்ப்பது ஆகிய பணிகளை அஞ்சல் துறை மேற்கொள்கிறது. இடைப்பட்ட சேவையை ரயில்வே துறை மேற்கொள்கிறது.

மேலும், பாா்சல்களின் நிலையை அறிவதற்காக பிரத்யேக கைப்பேசி செயலியும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, பாா்சல் எங்குள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT