கோயம்புத்தூர்

மாநகராட்சி குறைகேட்பு முகாம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

30th Nov 2022 12:27 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் மேயா் கல்பனா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தலைமை வகித்தாா், துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் 5 மண்டலங்களில் இருந்தும் 41 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட மேயா் கல்பனா, இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT