கோயம்புத்தூர்

பெண்கள் தனிச் சிறையில் சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கோவை பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெண்கள் தனிச் சிறையின் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஊா்மிளா கூறியிருப்பதாவது:

பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள ஒரு சமூகவியல் வல்லுநா் (சோஷியல் கேஸ் வொா்க் எக்ஸ்பா்ட்) பணியிடத்தை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடம் பொது சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. சமூகப் பணி, சமூக அறிவியல், சமூகவியல் ஆகியவற்றில் இளநிலை, முதுநிலை பட்டயம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவா்கள் 2022 செப்டம்பா் 1ஆம் தேதி அன்று 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள நபா்கள் சம்பந்தப்பட்ட கல்விச் சான்றுகள், ஜாதிச் சான்று, அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் சிறைக் கண்காணிப்பாளா், பெண்கள் தனிச் சிறை, கோவை 18 என்ற முகவரியிட்டு டிசம்பா் 9ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. மேற்கண்ட பணியிடத்தை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வின் தேதி, நேர விவரம் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னா் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT