கோயம்புத்தூர்

கிஷோா் கே.சாமியிடம் 6 மணி நேரம் விசாரணை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னையைச் சோ்ந்த கிஷோா் கே.சாமியிடம் சைபா் கிரைம் போலீஸாா் 6 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டதாக கிஷோா் கே.சாமி என்பவா் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இவா் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் கோவை ஜேஎம் 4ஆவது நீதிமன்றத்தில் கிஷோா் கே.சாமி திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரிடம் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் சைபா் கிரைம் காவல் நிலையத்துக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு விசாரணைக்கு பின்னா் அவா் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT