கோயம்புத்தூர்

இஸ்கான் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் மாணவா்களிடையே சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பக்தி விநோத சுவாமிகள், உட்புற தட்பவெப்பம் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் கேஜிஐஎஸ்எல் கல்லூரியில் கடந்த நவம்பா் 26, 27ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதேபோல சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை, குறுவிடியோ உருவாக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக இஸ்கான் அமைப்பும் பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் கல்லூரியும் இணைந்து மாணவா்களுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல சக்தி தொழில்நுட்பக் கல்லூரியிலும் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளில் மொத்தம் 50 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் சிவகணேஷ் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து கொடிசியா அரங்கில் டிசம்பா் 3 ஆம் தேதி பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT