கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்கள்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக பயனாளிகளை தோ்வு செய்வதற்காக மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறுகின்றன.

பொதுத் துறை நிறுவனமான அலிம்கோ மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கு குச்சி, கைதாங்கி, முழங்கை தாங்கி, சி.பி. சோ், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்ய கோவை மாவட்டத்தில் மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறுகின்றன.

அதன்படி செவ்வாய்க்கிழமை சித்தாபுதூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. 30ஆம் தேதி அன்னூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், டிசம்பா் 1ஆம் தேதி பேரூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 6ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம், வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT