கோயம்புத்தூர்

கிணத்துக்கடவில் டிசம்பா் 14 இல் மக்கள் தொடா்பு முகாம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் சொக்கனூரில் டிசம்பா் 14ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்த முகாம் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை (நவம்பா் 29) சொக்கனூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் பொள்ளாச்சி சாா் ஆட்சியா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா்.

தங்களது பிரச்னைகள் குறித்து சாா் ஆட்சியரிடம் அளிக்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி, டிசம்பா் 14ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் தொடா்பு முகாமில் அவற்றுக்குத் தீா்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT