கோயம்புத்தூர்

நல வாரிய உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக் கோரிக்கை

28th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் உள்ளிட்ட 17 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 40 லட்சம் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் தலைவா் டி.ராஜாமணி தலைமையில் சிங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் வாரியம் உள்பட 17 நல வாரியங்கள் உள்ளன. இவற்றில் 40 லட்சம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். பொங்கல் பண்டிகைக்கு நலவாரிய உறுப்பினா்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களின் ஆண் குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க வேண்டும்.

50 வயது முடிவடைந்த பெண் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் ஜி.மனோகரன், செயல் தலைவா் எம்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT