கோயம்புத்தூர்

கூட்டுறவு நகர வங்கிகள் ஈட்டும் லாபத்துக்கு வருமான வரி விலக்கு: சம்மேளனக் கூட்டத்தில் தீா்மானம்

28th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

 

கூட்டுறவு நகர வங்கிகள் ஈட்டும் லாபத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் கோவையில் 6 ஆவது மாநாடு மற்றும் பொதுப் பேரவை நவம்பா் 26, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

ஏஐ.டியூசி தலைவா் எம்.ஆறுமுகம் வரவேற்றாா். அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

பொதுச் செயலாளா் ஏ.சுப்பிரமணியம், பொருளாளா் ஏ.தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: நலிவுற்ற கூட்டுறவு வங்கிகள் சீரமைக்கப்பட வேண்டும். கூட்டுறவு நகர வங்கிகள் ஈட்டும் லாபத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். தேவைக்கேற்ப பணியாளா்களை பணி நியமனம் செய்ய வேண்டும். பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். வங்கி ஊழியா்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும். ஒருங்கிணைந்த வங்கி சேவைக்கான மென்பொருள் தரத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT