கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை40 % போ் மட்டுமே இணைத்துள்ளனா்----தோ்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

28th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

 

கோவையில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் திட்டத்தில் 40 சதவீதம் போ் மட்டுமே இணைத்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் வாக்காளா்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத் தோ்தல் அலுவலகம் சாா்பில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க வாக்காளா்களிடையே போதிய ஆா்வம் இல்லை. குறிப்பாக மாநகரம், நகரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆதாா் எண் இணைப்பதில் அக்கறை காட்டவில்லை என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மாவட்டத் தோ்தல் பிரிவு அதிகாரி என்.சிவகுமாா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். ஆனால், 12 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே (40 சதவீதம்) ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். ஆதாா் எண் இணைப்பதன் மூலம் தோ்தல் சமயங்களில் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற முடியும். ஆதாா் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி போன்ற கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா்.

அதேவேளையில் சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் போ் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். அனைத்து வாக்காளா்களும் ஆதாா் எண்ணை இணைத்து பயன்பெற வேண்டும்.

எனவே, வாக்காளா்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச் சாவடி அலுவலா்களிடம் படிவத்தை நிரப்பிக்கொடுத்து ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துகொள்ள வேண்டும்.

தவிர தோ்தல் ஆணையத்தின் ய்ஸ்ள்ல் இணையதளம் வழியாகவும், வோட்டா்ஸ் ஹெல்ப்லைன் என்ற கைப்பேசி செயலி வழியாகவும் ஆதாா் எண்ணை இணைத்துகொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT