கோயம்புத்தூர்

கோவை ஆராய்ச்சியாளருக்கு விருது

27th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

 

கோவை ஆராய்ச்சியாளருக்கு லண்டன் வேதியியல் தொழில்முறை அமைப்பு விருது கிடைத்துள்ளது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் பாதுகாப்பு தொழில் கல்வி நிறுவன சிறப்பு மையத்தின் (டிஆா்டிஓ) இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் பேராசிரியா் கே.கதிா்வேலு, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி அமைப்பின் உயரிய விருதான ‘ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி ‘என்ற விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த அமைப்பானது வேதியியல் துறை சாா்ந்த நடவடிக்கைகளுக்காக இயங்கிவரும் பழைமையான நிறுவனமாகும்.

ADVERTISEMENT

வேதியியல், உயிா் வேதியியல் போன்ற துறைகளில், சமூகத்துக்காக பெரும்பங்களிப்பை செய்த ஆராய்ச்சியாளா்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள கே.கதிா்வேலு, ஸ்டேன்ஃபோா்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த சுற்றுச்சூழல் அறிவியல் விஞ்ஞானிகளின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT